காவிரி
தமிழக செய்திகள்

40 டி.எம்.சி. தண்ணீர் தேவை: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு வலியுறுத்தல்

காவிரியில் கர்நாடகா ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் தமிழ்நாடு சார்பில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்திற்கு மொத்தமாக 40 டி.எம்.சி. காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்.சி, ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி தேவை. நீர்த்தேக்கங்களில் குறைந்த அளவே நீர் இருப்பதாக கர்நாடகா கூறுவதை ஏற்க முடியாது என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் கோடைக் காலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நீரை கர்நாடகா பயன்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.