தமிழக செய்திகள்

விமான எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

வரி குறைப்பு 2026 நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயணிகளுக்கான விமானப் பயணச் செலவுகளைக் குறைக்கவும், மாநிலத்திற்குள் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை விரிவுபடுத்த ஊக்குவிக்கவும், தமிழக அரசு மாநிலத்திற்குள் விமானச் சேவைகளுக்காக திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான டர்பைன் எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (VAT) குறைத்துள்ளது.

வரி குறைப்பு

சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான மதிப்புக்கூட்டு வரி 29%-லிருந்து 16%-ஆகவும், மற்ற விமான நிலையங்களில் 29%-லிருந்து 1%-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 40,000 கிலோவுக்கும் குறைவான அதிகபட்ச புறப்படும் விமானங்களை இயககி , சென்னையை தவிர்த்து மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு, விமான டர்பைன் எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) அரசு 5%-லிருந்து 1%-ஆகக் குறைத்துள்ளது.

நவம்பரில் அமல்

வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறையால் வெளியிடப்பட அரசாணை மூலம் அறிவிக்கப்பட்ட இந்த வரி குறைப்பு அறிவிப்பானது2026 நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். இது ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வரிச் சலுகையானது, தமிழ்நாட்டிற்குள் உள்ள நகரங்களை இணைக்கும் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தவும், திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விமான நிறுவனங்களைத் தூண்டும் என்றும், இதன் மூலம் வணிகப் பயணிகளுக்கான இணைப்பு மேம்படும் நோக்கில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக வரிச் சலுகையைப் பெற, எரிபொருள் விற்​பனை செய்​யும் நிறு​வனம், அதை வாங்​கும் விமான நிறு​வனம் பூர்த்தி செய்து கையொப்​பமிட்ட உறுதி​மொழி படிவத்தை தங்​கள் மாதாந்​திர வரிக் கணக்​குடன் சம்​பந்​தப்​பட்ட மதிப்​பீட்டு அலு​வலரிடம் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த படிவம் ஒவ்​வொரு மாதமும் அளிக்​கப்​பட வேண்​டும். வாங்​கப்​பட்ட எரிபொருள் உள்​நாட்டு விமானப் பயன்​பாட்​டுக்​கானது என்​ப​தையும் அதில் விமான நிறு​வனம் உறுதிசெய்ய வேண்​டும்.

SCROLL FOR NEXT