தமிழக செய்திகள்

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

வடதமிழக கடலோரத்தில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கிழக்கு திசையில் நகர்ந்ததால் ரெட் அலர்ட் வாபஸ்.

சென்னைக்கு விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வாபஸ் பெற்றது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோரத்தில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கிழக்கு திசையில் நகர்ந்ததால் ரெட் அலர்ட் வாபஸ் .சென்னையில் ஓரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் படை அரக்கோணத்தில் இருந்து 3 குழுக்களைச் சேர்ந்த 90 வீரர்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT