சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்தது.
chennai rain
Published on: 
Summary

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி உள்ளன.

சென்னையில் இன்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்த நிலையில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னையில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்

அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் பெய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, பொறுப்பு அமைச்சர்கள் 8 பேரும் உடனே சென்னை வரவேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் உடனடியாக தீர்வு காணவேண்டும். மழை நீரை அகற்றும் பணிகளை 15 மண்டலத்துக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் களத்தில் சென்று பார்வையிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com