தமிழக செய்திகள்

நியாய விலை கடை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற பிரேமலதா வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது.கோரிக்கையை செவி சாய்த்து உடனடியாக அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் தொடர்ந்து 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது. உடனடியாக நியாய விலை கடைகளில் இருக்கின்ற ஊழியர்களுக்கு அவர்கள் கேட்கிற கோரிக்கையை நிறைவேற்றி, தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் தருணத்தில் அவர்களுடைய கோரிக்கையை செவி சாய்த்து உடனடியாக அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT