கத்தாரின் முக்கிய தொழில்துறை நகரமான ராஸ் லபான் நகரில் அமைந்துள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் ஏற்பட்ட அதிபயங்கர வெடிவிபத்தில், 12 இந்தியர்கள் உட்பட மொத்தம் 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவத்தில் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கத்தார் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நிதி உதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கடந்த 21-ந்தேதி பபித், சுவின், சஜித்குமார் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம், வேதனை அடைந்தேன்.
கத்தார் ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக தமிழகம் கொண்டு வர வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.