தமிழக செய்திகள்

கோவை கைதி தப்பியோட்டம் - 4 போலீசார் சஸ்பெண்ட்

கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துவரப்பட்ட போது சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் தப்பி ஓடியுள்ளார்.

வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய ராகவன் (25) என்ற கைதி, அன்னூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.கைதான ராகவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துவரப்பட்ட போது சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் தப்பி ஓடியுள்ளார்.

போலீசார் சஸ்பெண்ட்

கோவையில் விசாரணை கைதி தப்பியோடிய விவகாரத்தில் கவனக்குறைவக செயல்படட் போலீசார் 4 பேர் சஸ்பெண்ட் செய்யபப்ட்டுள்ளனர்.பாதுகாப்பாக அழைத்து வந்த 4 போலீசாரை தள்ளிவிட்டு கைதி ராகவன் தப்பியோடியுள்ளார்.

கைதியை தேடும் பணி தீவிரம்

தப்பியோடிய கைதியை, ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர வாகனச்சோதனைகள் மூலம் கைதியை தேடுவருவதாக காவல்துறை விளக்க அளித்துள்ளது.கோவை மாநகரம் மற்றும் மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தப்பியோடிய கைதி ராகவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிகுள்ளாக்கிய நிலையில்,மீண்டும் கோவையில் மற்றொரு கைதி தப்பியோடியது பெரும் பரப்பரப்பை எறப்டுத்தியுள்ளது

SCROLL FOR NEXT