கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்

கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பி ஓடியது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி
Published on: 
Summary

கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அன்னூர் காவல்நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட வழக்கில் ராகவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான ராகவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துவரப்பட்ட போது சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் தப்பி ஓடியுள்ளார்.

கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பி ஓடியது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல், தேனியை தொடர்ந்து கோவை மத்திய சிறையிலும் கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X