தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சர் ஜோசப் விஜயை இன்று காலை 8.40 மணி அளவில் அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.
அவர் கூறிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:-
“முதல்வர் அவர்களே, இந்த இனிய பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட்டு, நீங்கள் எடுக்கின்ற அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், எதிர்ப்புக்கள் தவிடு பொடியாகவும், தமிழ்நாட்டினுடைய மேன்மைக்காவும், உயர்வுக்காகவும், வழிகாட்டும் நல்லாட்சி நீங்கள் நடத்திடவும், முழுமையான உடல் நலனோடும், மன நிறைவோடும் பன்னூறு பிறை கண்டு வாழவும் இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்துத் தெரிவித்தார்.
முதல்வர் அவர்கள் அதற்கு நன்றி கூறினார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.