தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் வருகிற 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்- அரசு அறிவிப்பு

பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை செலுத்தி கொள்ளும்படி தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த மையங்களில் 52.91 லட்சம் 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்த வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஏற்கனவே 0-5 வயதுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். முகாம் நடைபெறும் நாட்களில் முக்கியப் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சோதனை சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 7 மணி முதல்...

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். முதல் நாளான 28-ந்தேதி அனைத்து முகாம்களிலும், 29, 30 ஆகிய 2 நாட்களில் தற்காலிக மையங்களிலும் போலியோ சொட்டு மருந்த வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து முகாம்களில் வழங்கப்படும். நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக தொலைதூர மற்றும் எளிதில் செல்ல இயலாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை செலுத்தி கொள்ளும்படி தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்