தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு போலீசார் சம்மன்

தவெகவின் நிர்வாகி உதயகுமார் எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திமுக நிர்வாகி முரளிதரன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக முப்பெரும் விழா

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 7-ந்தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், வில்லிவாக்கம் பகுதி 95-வது வார்டு கவுன்சிலரான சுதா தீனதயாளன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான சொற்களாலும் விமர்சித்துப் பேசியதாகக் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

முதலமைச்சர் விஜய்

இந்நிலையில், முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறி, தவெகவின் நிர்வாகி உதயகுமார் எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன்

இந்த புகாரின் அடிப்படையில், அவதூறாகப் பேசிய திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திமுக நிர்வாகி முரளிதரன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சுதா தீனதயாளனுக்கு எஸ்பிளனேட் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

SCROLL FOR NEXT