முதலமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர்- பகுதி செயலாளர் மீது வழக்கு- போலீசார் நடவடிக்கை

விழாவில் பேசிய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் வில்லிவாக்கம் பகுதி தி.மு.க 95வது வட்ட கவுன்சிலருமான சுதா தீனதயாளன் தமிழக முதலமைச்சர் விஜய் பற்றி தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியுள்ளார்.
வழக்கு பதிவு
Published on: 
Summary

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற விழாவில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீசார் சுதா மற்றும் விழா ஏற்பாட்டாளர் முரளி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

அவதூறு பேச்சு

துறைமுகம் பகுதி செயலாளர் முரளி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் வில்லிவாக்கம் பகுதி தி.மு.க 95வது வட்ட கவுன்சிலருமான சுதா தீனதயாளன் தமிழக முதலமைச்சர் விஜய் பற்றி தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக துறைமுகம் பகுதி த.வெ.க. செயலாளர் உதயகுமார் எஸ்பிளனேடு போலீசில் புகார் அளித்தார். அதில் இரு தரப்பினர்களிடையே பிரச்சனை உண்டாக்கும் நோக்கத்திலும், பொது மக்களிடையே பதற்றம் ஏற்படுத்தும் விதத்திலும் பேசியுள்ள திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் விழாவை ஏற்பாடு செய்த முரளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதன் பேரில் போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com