தமிழக செய்திகள்

கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் ராஜுமீது போக்சோவில் வழக்குப்பதிவு!

கபடி வீராங்கனை கார்த்திகா மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர்.

சென்னை கண்ணகி நகர் பகுதியின் பிரபல கபடி பயிற்சியாளர் ராஜுமீது, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 17 வயது கபடி வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9ம் தேதி முதல் 3 முறை வீராங்கனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய மகளிரணி கபடி போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு கண்ணகி நகர் கார்த்திகா முக்கியப் பங்காற்றினார். கார்த்திகாவிற்கு பயிற்சி அளித்ததன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர் பயிற்சியாளர் ராஜு.

கார்த்திகா மட்டுமின்றி கண்ணகி நகரில் இருக்கும் பல்வேறு மாணவர்களுக்கு கபடி பயிற்சி அளித்துவந்தார்.