ஆந்திர மாநில வன எல்லையான நலகொண்டா பள்ளி, செத்தப்பட்டா ஆகிய இடங்களில்சுற்றிதிரிந்த ஒரு குட்டியானை 2 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் தமிழக வனப்பதியான மோர்தானா வனப் பகுதி வழியாக பேரணாம்பட்டு அருகில் உள்ள சாத்தர் மலைப்பகுதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நுழைந்தன.
இந்த யானைகள் பேரணாம்பட்டு அருகே மலைப்பகுதியை ஒட்டியுள்ள லாலாப்பேட்டையில் கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த முருகேசன், ஷீலா ஆகியோருக்கு சொந்தமான மாந்தோப்புகளில் காட்டு யானைகள் புகுந்து மாந்தோப்புகளை சூறையாடி 20-க்கும் அதிகமான மாமரங்களை முறித்து சேதப்படுத்தி அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்களை தின்று சேதப்படுத்தின.
தகவல்அறிந்த பேரணாம்பட்டு வனசரகர் மோகன வேல் தலைமையில் வனத்துறையினர் விரைந்துசென்று காட்டு யானைகளை கிராம மக்கள் உதவியுடன் மேளம் அடித்தும், பட்டாசு, வெடித்தும் போராடி அடர்ந்த வனப் பகுதிக்குள் கொட்டும் மழையில் விரட்டினர்.