தமிழக செய்திகள்

ஆர்.பி.சவுத்ரி மறைவு- பிரேமலதா இரங்கல்

ஆர்.பி.சவுத்ரி கேப்டன் விஜயகாந்த் மீது பேரன்பும், மரியாதையும் கொண்டவர்.

ராஜஸ்தானில் கார் விபத்தில் சிக்கி தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரேமலதா தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ராஜஸ்தானில் கார் விபத்தில் சிக்கி தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழந்த செய்தி அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கேப்டன் விஜயகாந்த் மீது பேரன்பும், மரியாதையும் கொண்டவர்.

அனைவரிடமும் அன்போடு பழகக்கூடிய இனிமையான மனிதர் ஆர்.பி.சவுத்ரியின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு.

ஆர்.பி.சவுத்ரியின் ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT