தமிழக செய்திகள்

சென்னைக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் வாபஸ் - வானிலை ஆய்வு மையம்

இப்பகுதிகளில் இனி மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

‘அக்வான்’ புயல் தீவிரமடைந்து வருவதால் சென்னைக்கு விடுவிக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிககையானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வாபஸ் பெறப்பட்ட ஆரஞ்சு அலர்ட்

அக்வான் பயல் காரணமாக சென்னைக்கு விடுவிக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கையானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளில் இனி மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது, தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT