சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராடிய செவிலியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தின் அருகே செவிலியர்கள் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாலையில் அவர்களை காவல்துறை குண்டுகட்டாக கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பேச்சுவார்த்தைக்காக ஐந்து பிரதிநிதிகளை இரவு 7 மணிக்கு, தலைமைச் செயலகம் அழைத்துச் சென்று அவர்களை கைது செய்ததாக செவிலியர்களுக்கான வழக்கறிஞர் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.