தாய்மாமன் தங்க மோதிரம் கேட்டு தகராறு: செவிலியர் மீது தாக்குதல்

காயம் அடைந்த 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தாய்மாமன் தங்க மோதிரம் கேட்டு தகராறு: செவிலியர் மீது தாக்குதல்
Published on: 

கும்பகோணம் அருகே முழையூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அலமேலு (வயது 35). கிராம சுகாதார செவிலியர்.

தாய் மாமன் தங்க மோதிரம்

அதே பகுதியை சேர்ந்த மதன் மற்றும் வனிதா தம்பதிக்கு கடந்த (செப்டம்பர் மாதம்) 16-ந்தேதி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில் மதன் மற்றும் வனிதா தம்பதி அலமேலுவிடம் தங்கள் குழந்தைக்கு வீட்டில் சாமி கும்பிடும் நிகழ்வு நடத்த உள்ளோம். அதற்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 1 கிராம் மோதிரத்தை உடனே தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

தாக்குதல்

அதற்கு அவர், குழந்தை பிறந்த தேதியின் அடிப்படையில் உங்களை அழைத்து தங்க மோதிரம் தருவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதை ஏற்காத அவர்கள் அலமேலுவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது மதுபோதையில் இருந்த மதன் ஆத்திரத்தில் அலமேலு, அவரது சித்தி சுஜாதா, சகோதரர் சுமன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி, மண் வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

விசாரணை

இதில் காயம் அடைந்த 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தசம்பவம் அப்பகுதியில் உள்ள அரசு சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com