தமிழக செய்திகள்

சென்னையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு? - பிரதீப் ஜான் விளக்கம்

சென்னையில் பகல் நேரத்தில் மழை குறையும்.

சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் மழை பெய்யும் என்று எல்நினோ தாக்க ஆய்வு குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாக இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னையில் மழை

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதல் பெய்தது. இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது.

பிரதீப் ஜான்

இந்நிலையில், சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் மழை பெய்யும் என்று எல்நினோ தாக்க ஆய்வு குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சென்னையில் பகல் நேரத்தில் மழை குறையும். இரவில் மீண்டும் அதிகரிக்கும். மழை மேகங்கள் வடக்கே பொன்னேரி–பழவேற்காடு பகுதியை நோக்கி நகர்ந்துவிட்டன.

சென்னையில் பகலில் வெயில் தலைகாட்டும். அதே சமயம் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் மழை தீவிரமடையக்கூடும்.

ஆனால், நேற்று இரவு பெய்த மழையின் தீவிரத்தை விட குறைவாகவே இருக்கும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT