தமிழக செய்திகள்

சாலை விபத்தில் 4 மாணவிகள் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

தனியார் கல்லூரி பஸ், மொபட் மீது பயங்கரமாக மோதியது.

நாமக்கல் திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

திருச்செங்கோடு அருகே மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் அக்காள்-தங்கைகள் உள்பட 4 மாணவிகள் பலியானார்கள்.

மாணவிகள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே உள்ள சக்க ராம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு 3 மகள்கள்.

இதில் சுபிதா கலைச்செல்வி (வயது 19), ராசிபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நிவேதிதா (16), தனுஸ்ரீ (13) ஆகிய 2 பேரும் எலச்சிபாளையம் அரசு பள்ளியில் 11 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் நிவேதிதா, தனுஸ்ரீயை அழைத்து வருவதற்காக அக்காள் சுபிதா கலைச்செல்வி மொபட்டில் பள்ளிக்கு சென்றார். பின்னர் தங்கைகள் 2 பேரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த மொபட் டில் அவர்களது சித்தப்பா ரமேஷ்பாபுவின் மகளான 6-ம் வகுப்பு மாணவி அபிநயா (12) என்பவரும் உடன் வந்தார்.

4 பேரும் பலி

அவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக சக்கராம்பாளையம் பிரிவு ரோட்டை மொபட்டில் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ், மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மொபட்டில் சென்ற சுபிதா கலைச்செல்வி, அவ ரது தங்கைகள் நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 பேரும் தூக்கி வீசப் பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் ஒரே குடும் பத்தை சேர்ந்த அக்காள்-தங்கைகள் 3 பேர், உறவுக்கார சிறுமி ஒருவர் என 4 மாணவிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் நிதியுதவி

நாமக்கல் திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.

பள்ளி மாணவிகள் மூவரை பைக்கில் அழைத்து சென்ற கல்லூரி மாணவி என 4 பேர் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT