4 சிறார்கள் உயிரிழப்பு- ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

விபத்தில், 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
TN CM Vijay
Published on

திண்டுக்கல்லில் பால் வேன் மோதி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிறுவன் மோசிகரன், சிறுமிகள் யோகவர்ஷினி, அனன்யா, தனு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடி தலைமறைவான ஓட்டுநர் சரவணனை கைது செய்த போலீசார் பால் வேனையும் பறிமுதல் செய்தனர்.

நிதியுதவி

திண்டுக்கல் வடமதுரை அருகே வாகனம் மோதிய விபத்தில் 4 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்திகேட்டு வேதடையடைந்தேன் என முதலமைச்சர் விஜய் அறவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

திண்டுக்கல் கோர விபத்தில் 4 குழந்தைகள் பலியான செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.

குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com