தமிழக செய்திகள்

பணமோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்கு ஆஜர்

சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார்.

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்காக ஆஜரானார்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணிமோசடி வழக்கின் எப்ஐஆர்-ல் சிவசங்கர் பெயர் இடம்பெற்ற நிலையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி புகாரில் சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார்.