தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். பல்லவி தனது கைக்குழந்தையைச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி பொது மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தூக்கிச் செல்வது சமூக ஊடகங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் அவ்வப்போது பேசுபொருளாக மாறும்.
பல்லவியின் இந்தச் செயலுக்கு சிலர் ஆதரவாகவும், பலர் எதிராகவும் இணையத்தில் கருத்து தெரிவிப்பர்.
இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பல்லவியின் பெயரை குறிப்பிடமால் அவர் இடம்பெற்றிருக்கும் வீடியோ ஒன்றை மறுபதிவிட்டு.,
“பணியிடத்தில் இருக்கும் குழந்தைப் பராமரிப்பு மையங்கள், மகப்பேறு மற்றும் தந்தைக்கான விடுப்பு போன்ற குடும்பநலன் சார்ந்த கொள்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
இருப்பினும், கைக்குழந்தையைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது என்பது நடைமுறைத் தேவை என்பதை விட, அரசியல் ரீதியான வெளிச்சம் தேடும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது. இது குறித்து தவெக தலைமை அவருக்குத் தகுந்த அறிவுரை வழங்கும் என நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.