சட்டப்பேரவையில் இதுவரை எந்த முகபாவமும் காட்டாமல் அமர்ந்திருந்த முதல்வர் விஜயின் முகத்தில் சிரிப்பை எம்எல்ஏக்கள் உண்டாக்கியது.
முதலமை்சர் வாழ்த்த மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் 7 முறை எழுந்தும் வாயப்பு அளிக்கப்படாதது குறித்து நகைச்சுவையாக பேசினார்.
பேசுவதற்கு மீண்டும் வாய்ப்பு அளித்தபோது அப்பாடா 8வது முறையாக முதலமைச்சரை வாழ்த்த வாய்ப்பு கிடைத்ததாக காமராஜ் நகைச்சுவையாக கூறினார்.
மன்னார்குடி எமஎல்ஏ காமராஜ் பேச்சை கேட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் முகத்தில் சிரிப்பை உண்டாக்கியது.
ஒரு வழியாக 8வது முறையாக எழுந்து நின்று முதலமைச்சர் விஜய்க்கு எம்எல்ஏ காமராஜ் வாழ்த்து கூறினார்.
அப்போது, பேசுவதற்கு எம்எல்ஏ காமராஜ் 8 முறை எழுந்தது நல்ல உடற்பயிற்சி தான் என சபாநாயகர் கிண்டல் செய்தார்.
பின்னர், மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தவெக அரசை முழுமையாக பாராட்டி அவர் தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்தார்.