தமிழக செய்திகள்

SSLC மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

சென்னை :

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.

இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.