தமிழக செய்திகள்

சாதி எனும் 1000 ஆண்டு அழுக்கை போக்குவது தான் நமது நோக்கம் - மு.க.ஸ்டாலின்

மாணவர்களின் முன்னேற்றம் கண்கள் போன்றது, பெண்களின் முன்னேற்றம் இதய துடிப்பு போன்றது.வெறுப்பு அரசியலை விடவும் அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது ஆற்றல் வாய்ந்தது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும் இயக்கம் திராவிட இயக்கம்.

* கொள்கை பிடிப்பு மிக்க அரசியல் தலைவராக திருமாவளவன் இருக்கிறார்.

* சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.

* கடந்த 4 ஆண்டுகளில் 6,900-க்கும் அதிகமாக சமூக நீதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம்.

* மாணவர்களின் முன்னேற்றம் கண்கள் போன்றது, பெண்களின் முன்னேற்றம் இதய துடிப்பு போன்றது.

* மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தில் ஆதிதிராவிடர் சமூக சகோதரிகள் அதிக பயனடைந்துள்ளனர்.

* பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* சாதி எனும் 1000 ஆண்டு அழுக்கை போக்குவது தான் நமது நோக்கம்.

* ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்ததுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம்.

* வெறுப்பு அரசியலை விடவும் அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது ஆற்றல் வாய்ந்தது.

* சாதிய பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.

* சாதிய ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று நமது மனதில் ஏற்பட்டுள்ள மாற்றம் அனைவரது மனதிலும் ஏற்பட வேண்டும்.

* சமூக பணிகளாலும் சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை சாத்தியப்படுத்துவோம்.

* ஆதிதிராவிடர், பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும்.

* சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் 10 கிராமங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

* இந்தாண்டும் சிறந்த 10 கிராமங்களுக்கு சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள்ளது.

* திருவள்ளுவர் நாளன்று அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.