தமிழக செய்திகள்

பீகாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலை அ.தி.மு.க.விற்கு வரும் - அமைச்சர் சிவசங்கர்

எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு அறிவிப்புக்கு பின்னாலும் அமித்ஷா தான் இருக்கிறார்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. கூட்டணி கட்சிகளை அடிமை கட்சிகள் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

* தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட அனுமதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

* நல்லுறவோடு இருக்கும் கூட்டணியை விமர்த்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

* பீகாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலை தான் அ.தி.மு.க.விற்கு வரும்.

* எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு அறிவிப்புக்கு பின்னாலும் அமித்ஷா தான் இருக்கிறார்.

* ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.

* எதிர்க்கட்சியாக இருந்த கட்சி என்பதால் தே.மு.தி.க.விற்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.