தமிழக செய்திகள்

எப்போதும் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது... அமைச்சர் ரகுபதி பேச்சால் பரபரப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும் போதும் என நினைக்கிறார் இ.பி.எஸ்.

மாலை மலர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* எந்த ஆட்சியாக இருந்தாலும் எப்போதும் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது.

* அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது, அ.தி.மு.க. அமைச்சர் மீது குட்கா வழக்கு இருக்கிறது.

* போதைப்பொருள் சப்ளை செய்பவர்களை கட்சியில் வைத்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

* பள்ளிக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையா? எங்கே என்று கூறினால் நடவடிக்கை உறுதி.

* அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் எத்தனை கொலைகள்? புள்ளி விவரத்துடன் பேச முடியுமா?

* பெண்கள் மீது எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.-க்கு திடீர் பாசம்.

* தி.மு.க. கூட்டணிக்கு 80% பெண்கள் ஆதரவு இருப்பதை தெரிந்துகொண்டு அதை தடுக்க சதி செய்கின்றனர்.

* பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற போலி நாடகத்தை நடத்த முயற்சி நடக்கிறது.

* பிரசார பயணத்தில் தோல்வி கண்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது இ.பி.எஸ். தான்.

* அ.தி.மு.க. என்ற கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதால் பதவியை தக்க வைக்க இ.பி.எஸ். முயற்சி

* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும் போதும் என நினைக்கிறார் இ.பி.எஸ்.

இவ்வாறு அவர் கூறினார்.