தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வை. பா.ஜ.க.விடம் அடகுவைத்தவர் எடப்பாடி பழனிசாமி- அமைச்சர் ரகுபதி

கஞ்சா தமிழகத்திற்குள் வருவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டு தமிழக அரசின் மீது குற்றம்சாட்டுவது ஏற்கத்தகாதது.தி.மு.க. அரசு எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கியும் போகாது. அடமானமும் வைக்காது.

தமிழக உரிமைகளை தி.மு.க. அடகு வைத்ததாக கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கஞ்சா தமிழகத்தில் பயிரிடப்படுவதில்லை. வடமாநிலங்கள், வெளிநாடுகளில் பயிரிடப்படுகிறது.

* கஞ்சா தமிழகத்திற்குள் வருவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டு தமிழக அரசின் மீது குற்றம்சாட்டுவது ஏற்கத்தகாதது.

* அ.தி.மு.க. வை நான்கரை ஆண்டுகள் பா.ஜ.க.விடம் அடகுவைத்துவிட்டு ஆட்சி நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

* தி.மு.க. அரசு எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கியும் போகாது. அடமானமும் வைக்காது.

* எங்களுக்கு சொந்த புத்தி உண்டு. சொந்த காலில் நிற்கும் சக்தி உண்டு. சொந்த மண்ணை காப்பாற்றும் திறமையும் உண்டு.

* நாங்கள் விவாதத்திற்கு தயார் என எத்தனையோ முறை சொல்லி விட்டோம்.

* இ.பி.எஸ். அழைத்தால் நானே ஒரே மேடையில் விவாதிக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.