தமிழக செய்திகள்

தவெக சோபா மாடல் என்றால் திமுக பாப்பா மாடல் - அமைச்சர் ரமேஷ்

பதவிகளை துறந்து அதிமுகவில் இருந்து தவெக இணைந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் த.வெ.க. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடைபெற்றது.

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:

* பதவிகளை துறந்து அதிமுகவில் இருந்து தவெக இணைந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

* தவெகவின் கோட்டையாக இருந்த புதுக்கோட்டை, கரூருக்கு மேலும் வலிமை கிடைத்துள்ளது.

* தவெக சோபா மாடல் என்றால் திமுக பாப்பா மாடல். தொட்டதெற்கெல்லாம் திமுக அழுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.