பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் போலவே பல்வேறு நூலகங்களில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
சென்னை புரசைவாக்கத்தில் ரூ.6 கோடியில் புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இது நல்ல தொடக்கம்.
* முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
* கடந்த காலங்களை விட காவல்துறைக்கு தவெக ஆட்சியில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகாரில் சட்டம் தன் கடமையை செய்யும்.
* கன்னிமாரா நூலகத்திலேயே கள்ளத்தனமான 523 நூல்கள் சிக்கியிருப்பது அவமானம்
* காலம் காலமாக பெரியார், அண்ணா பெயரை சொல்லி இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது.
* புது நூலகங்களுக்கு இனி நூல்கள் வாங்க சிறப்புக்குழு அமைக்கப்படும்.
* மோசடி பதிப்பகத்தார்களை சட்டத்தின்படி தண்டிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
* சென்னை கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகங்களிலும் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
* பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் போலவே பல்வேறு நூலகங்களில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* துறையூர் விவகாரத்தில் தவெக எம்எல்ஏ, அமைச்சர் என யாராக இருந்தாலும் முதலமைச்சர் விடமாட்டார்.
* போலி நூல்கள் கொள்முதல், வெளிநாட்டு எழுத்தாளர் பெயரில் போலி நூல்கள் என்பதெல்லாம் சர்வதேச தலைகுனிவு.
* போலி நூல் கொள்முதல் தொடர்பாக புகாரளித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
* 1 புத்தகத்தின் முன்பகுதியில் அகல்விளக்கு பதிப்பகம் என்றும் உள்ளே பீனிக்ஸ் பதிப்பகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
* தொகுதி சார்ந்த பிரச்சனைகளை கேட்க தவெக எம்எல்ஏக்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.