வரும் 11ம் தேதி அவசரக் கூட்டம்- தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர கட்சி தலைமை உத்தரவு

தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
TN CM Vijay
Published on: 

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவரும் நாளை மறுநாள் (11ம் தேதி) சென்னைக்கு வர கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் சர்ச்சையில் சிக்குவது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 11ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கட்சித் தலைமை கருதுகிறது. குறிப்பாக, தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய நபர் ஒருவரை தவெக எம்.எல்.ஏ. ரவிசங்கர் தாக்கிய விவகாரம், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த விசாரணையைத் தவெக மேற்கொண்டு வருகிறது.

மக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பைக் காக்கும் வகையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொதுவெளியிலும் தங்களது தொகுதிகளிலும் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தவெக தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடுமையான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் வழங்க உள்ளதாகத் கூறப்படுகிறது.

X