அமைச்சர் ராஜ்மோகன் 
தமிழக செய்திகள்

திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கை மூட வலியுறுத்தியது யார்?- அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறும் போது சம்பந்தப்பட்ட அந்த ஆடியோ தெளிவில்லாமல் இருப்பதாக கூறியிருக்கிறார். ஜெம் வீரமணி வழக்கில் எச்.டி. வீடியோவா கொடுக்க முடியும்?

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பாலியல் புகாரில் சிக்கிய ஜெம் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் மூட வலியுறுத்தியது யார் என கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆடியோ தெளிவில்லையென கூறியதையும், எச்.டி. வீடியோ தர முடியுமா என சவால் விடுத்ததையும் அவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சியின் விசாரணையையும், த.வெ.க. ஆட்சியின் துரித விசாரணையையும் ஒப்பிட்டு விமர்சித்தார்.

சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலியல் புகாருக்கு உள்ளான ஜெம் வீரமணி வழக்கை தி.மு. க. ஆட்சியில் மூட வலியுறுத்தியது யார்?. இந்த விஷயத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறும் போது சம்பந்தப்பட்ட அந்த ஆடியோ தெளிவில்லாமல் இருப்பதாக கூறியிருக்கிறார். ஜெம் வீரமணி வழக்கில் எச்.டி. வீடியோவா கொடுக்க முடியும்?

தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை

கடந்த தி.மு.க. ஆட்சியில் எந்த மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது?. இப்போது த.வெ.க. ஆட்சியில் விசாரணை எப்படி நடக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும். த.வெ.க. ஆட்சியில் இந்த வழக்கு விசாரணை துரிதமாக சென்று கொண்டிருக்கிறது.

எப்ஸ்டீன் வழக்கு போல ஜெம் வீரமணியின் வழக்கு மாறியுள்ளது.

ஜெம் வீரமணி விவகாரத்தில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும், அரசியல் புள்ளிகளாக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். வயதையும், செல்வாக்கையும் காரணம் காட்டி யாரும் தப்பி விட முடியாது என்றார்.

SCROLL FOR NEXT