தமிழக செய்திகள்

நாளை மறுநாள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, திரைத்துறை தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட மனு குறித்து அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதன் பின், 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:-

* நாளை மறுநாள் அதாவது வருகிற 20-ந்தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.