தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்

கே.என்.நேரு வீட்டில் வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது.

பெண்களை பற்றி அவதூறாக பொதுமேடையில் பேசியதற்காக தான் உதயநிதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும்.

பிரதமர் வேட்பாளர் குறித்த பேசுவதற்கு காலம் உள்ளது.

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது, ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பில்லை.

நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT