தமிழக செய்திகள்

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்

10 ஆண்டு காலம் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் டிடிவி தினகரன்.

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

சென்னை அண்ணாசாலையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மக்கள் யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.

* மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாஸை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.

* பாஸ் என்ன நிறம் என்பதே முந்தைய நாள் தான் எனக்கு தெரிய வந்தது.

* கும்பாபிஷேகத்திற்கான பாஸ் யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை அறநிலையத்துறை தான் எடுத்தது.

* கும்பாபிஷேகத்திற்காக 9,000 பாஸ்கள் ஆன்லைன் மற்றும் கோவில் நிர்வாகம் தான் கொடுத்தது.

* மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக டோக்கன் எனது குடும்பத்தினருக்கு கூட நான் கொடுக்கவில்லை.

* திமுக ஆட்சியில் அவர்களுடைய கட்சி சார்ந்த குடும்பத்தினர் தான் முன்வரிசையில் இருப்பர்.

* திமுகவை சேர்ந்த சிலர் தான் சில பிரச்சனைகளை கிளப்பினார்கள்.

* கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் தேவையின்றி திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்.

* மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எவ்வித விதிமீறலும் இல்லை.

* மின்சார தட்டுப்பாடு என்பது அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.

* ஆர்.கே.நகர், ஸ்டான்லி நகரில் பிஎஸ்என்எல் வேலையின்போது மின்வாரிய ஒயருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் மின்தடை ஏற்பட்டது.

* மின் பற்றாக்குறையால் கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது.

* மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம்.

* கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட 1 லட்சம் மின் கம்பங்களை சரி செய்ய 5 மாதங்கள் தேவைப்பட்டது.

* பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

* 10 ஆண்டு காலம் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் டிடிவி தினகரன்.

* இபிஎஸ்-ஐ வீழ்த்துவது தான் என் வாழ்நாள் லட்சியம் என்று கூறிய தினகரன் தற்போது அவரை முதல்வராக்க துடிக்கிறார்.

* தலைமை நீதிபதியை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்த புகார் பற்றி எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT