தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி சம்பவம்: முதலமைச்சர் விஜய் மிகவும் வருத்தம் அடைந்தார் - அமைச்சர் குமார்

சிறுமியின் குடும்பத்தாரிடம் அமைச்சர் குமார், ரூ.8 லட்சம் அரசு நிவாரண உதவித்தொகைக்கான காசோலை வழங்கும் உத்தரவு நகலை வழங்கினார்.

பாலியல் வன்கொடுமையில் இறந்துபோன சிறுமியின் குடும்பத்தார் இன்று காலை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அங்கு சிறுமியின் குடும்பத்தாரிடம் அமைச்சர் குமார், ரூ.8 லட்சம் அரசு நிவாரண உதவித்தொகைக்கான காசோலை வழங்கும் உத்தரவு நகலை வழங்கினார். மேலும் குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறும்போது, இதுபோன்ற சம்பவம் யாருக்கும் இனி நடக்கக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் மிகவும் வருத்தப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் கவிதா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ விஜயகுமார் உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.