தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு மாறிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார். தவெகவிற்கு மாறியதால் இவருக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இதன்மூலம் 10வது முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார்.
60 ஆயிரத்திற்கு அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். திமுக தரப்பில் போட்டியிட்ட நல்லசிவம் 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அதேப்போல திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வெற்றிப் பெற்றுள்ளார். 80 ஆயிரத்திற்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். இத்தொகுதியில் இரண்டாம் இடத்தில் தவெகவின் ராமமூர்த்தி உள்ளார்.