காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும், நீர் இருப்பும் சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணைக்கு வரும் நீரின் அளவு 1,397 கன அடியில் இருந்து 2,253 கன அடியாகஉயர்ந்து, மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 79.21 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் ஒட்டுமொத்த நீர் இருப்பு தற்போது 41.17 டிஎம்சியாக உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது பெய்து வரும் மழையினால் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நீர்வரத்து இதே போல் நீடித்தால் அல்லது மேலும் அதிகரித்தால், வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இது வரவிருக்கும் சாகுபடி பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.