தமிழக செய்திகள்

'Swadeshi', 'Make in India' என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!- மாணிக்கம் தாகூர்

அனைத்து துறைகளிலும் BJP-யின் இந்த போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது!

தமிழக காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

September 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு.

China-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க DGTR பரிந்துரைத்தும், Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது.

இதன் விளைவு?

5 முன்னணி உள்நாட்டு Crane உற்பத்தியாளர்கள் தொழிலை மூடும் அவலநிலை!

மோடி அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது?

இந்திய உற்பத்தியாளர்களுக்காகவா அல்லது Chinese நிறுவனங்களுக்காகவா?

அனைத்து துறைகளிலும் BJP-யின் இந்த போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது! என்று கூறியுள்ளார்.