தமிழக செய்திகள்

ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக! - மாணிக்கம் தாகூர்

உதயநிதியின் வழி அது ஆளுநர் வழி மற்றும் பாஜக வழி!

யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்! என்று மேடையில் முழங்கியவர்கள், இன்று அதே 'தபால்காரரிடம்' தபால் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள்! என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சந்தித்தார். அப்போது, கலெக்டர் விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தல் மற்றும் புகாரளிக்க வந்தவரை தாக்கியதாக கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்!" என்று மேடையில் முழங்கியவர்கள், இன்று அதே 'தபால்காரரிடம்' தபால் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள்!

அன்று அதிகாரம் கையில் இருந்தபோது "ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கொள்கை முழக்கம்; இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக!

மொத்தத்தில், உதயநிதியின் வழி அது ஆளுநர் வழி மற்றும் பாஜக வழி!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT