தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு - பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் சபாநாயகர்

தவெக சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே முத்திரை பதித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் பிரபாகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. 9-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றிபெற்றது.

வெற்றி

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் இன்று எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னிலையில் அவர்கள் இருவரும் உறுதி மொழி வாசித்து பதவி ஏற்றனர். அவர்களுக்கு அமைச்சர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ், ராஜ்மோகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். 2 எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்றதன் மூலம் சட்டசபையில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 109 ஆக உயர்ந்தது.

SCROLL FOR NEXT