தமிழக செய்திகள்

வங்கக்கடலில் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தாய்லாந்து, மியான்மரில் தற்போது மேல் காற்று சூறாவளி சுழற்சி நிலவுகிறது.

வங்கக்கடலில் வரும் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* தாய்லாந்து, மியான்மரில் தற்போது மேல் காற்று சூறாவளி சுழற்சி நிலவுகிறது.

* தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

* வங்கக்கடலில் வரும் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

* காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT