தமிழக செய்திகள்

சட்டம்-ஒழுங்கு விவகாரம்: முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை

தீபாவளி நாளில் நடந்து உள்ள கொலைகள் குறித்து போலீசாரும் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

சட்டம்- ஒழுங்கை காப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் தீபாவளி தினத்தில் கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசை விமர்சித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர்.

ஆலோசனை

தீபாவளி நாளில் நடந்து உள்ள கொலைகள் குறித்து போலீசாரும் விளக்கம் அளித்திருக்கிறார்கள். திடீரென நடைபெற்ற மோதல் சம்பவங்களே கொலைக்கு காரணம் என்று போலீசார் கூறி உள்ளனர்.

சட்டம்-ஒழுங்கை காப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தி வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு விவகாரம்

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று சட்டம்-ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் சாய் குமார், உள்துறை செயலாளர் கார்த்தி, டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டம்- ஒழுங்கை காப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகள் வேட்டையை தீவிரப்படுத்த உத்தரவிட்டு உள்ளனர்.

இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கொலை மற்றும் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT