நாகேந்திரா என்பவர் பெங்களூருவில் இருந்து துமாகுரு செல்ல கார் ஒன்றை புக் செய்தார். அந்த காரில் ரம்யா உல்லாஸ் (23) என்பவரும் பயணம் செய்துள்ளார். காரை பிரவீன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
கார் துமாகுரு அருகில் சென்றபோது நாகேந்திராவுக்கும், ரம்யாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே, நாகேந்திரா தான் வைத்திருந்த கத்தியால் ரம்யாவை குத்தியுள்ளார். இதில் ரம்யா காயம் அடைந்துள்ளார். டிரைவர் பிரவீன் இதை கவனிக்காமல் காரை ஓட்டிச் சென்றுள்ளார். உடனே, ரம்யா என்னை நாகேந்திரா கத்தியால் குத்தி விட்டார் என்று டிரைவரிடம் கூறியுள்ளார். அத்துடன், பையில் வெடிகுண்டு வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் டிரைவர் பயந்து காரை நிறுத்தியுள்ளார். உடனோ, ரம்யா காரில் இருந்து குதித்து தப்பியுள்ளார். டிரைவர பிரவீனும் காரில் இருந்து இறங்கியுள்ளார். அதற்குள் நாகேந்திரா கையில் இருந்து பொருளை வெடிக்கச் செய்துள்ளார். இதனால் வெடி விபத்து ஏற்பட்டு, கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் நாகேந்திரா காரில் இருந்தவாரே எரிந்து சாம்பலாகியுள்ளார். பிரவீன் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
டெட்டனேட்டர் உடன்கூடிய நாட்டு வெடிகுண்டை நாகேந்திரா வெடிக்கச் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.