தமிழக செய்திகள்

தியாகமும் தீரமும் நிறைந்த வ.உ.சிதம்பரனாரின் வாழ்வையும், விடுதலை வேட்கையையும் போற்றுவோம் - கனிமொழி

தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தியாகத் திருவிளக்கு ஐயா வ.உ.சிதம்பரனார்.

தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தியாகத் திருவிளக்கு ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாள் இன்று!

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளாகும். அவரது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திலும் தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தியாகத் திருவிளக்கு ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாள் இன்று!

சாமானிய மக்களின் உரிமைகளுக்காகவும், ஆங்கிலேய அடக்குமுறைக்கும் மற்றும் சர்வாதிகாரத்திற்கும் எதிராகவும் அஞ்சாது போராடியவர். தியாகமும் தீரமும் நிறைந்த அவரது வாழ்வையும், விடுதலை வேட்கையையும் போற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT