22 ஆண்டுகளுக்கு பிறகு 'சண்டியர்' தலைப்பை மீண்டும் பயன்படுத்திய கமல்ஹாசனின் புதிய படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 2004-ல் 'விருமாண்டி' படத்தின் தலைப்பாக இருந்த 'சண்டியர்' சமூக பிரச்சனைகளை உருவாக்கும் என கூறி மாற்றப்பட்டது. தற்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் 'சண்டியர்' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெயருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
23 ஆண்டுகளுக்கு முன்பு இதே 'சண்டியர்' பெயரில் படம் எடுக்க முயன்ற போதே, தென் தமிழகத்தின் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் என எச்சரித்திருந்தோம். தற்போது மீண்டும் அதே பெயரை பயன்படுத்துவது கமலின் ஆணவப் போக்கை காட்டுகிறது. தனது பிறந்தநாளில் பழிக்குபழி வாங்கும் விதமாக இதனை தொடங்கியுள்ளார். கமல்ஹாசன் தற்போது வெறும் நடிகர் மட்டுமல்ல, ஒரு அரசியல் கட்சியின் தலைவர். பதவியேற்கும் போது சாதி, இனம் சாராமல் செயல்படுவேன் என உறுதிமொழி எடுத்தவர், அதற்கு எதிராக செயல்படுகிறார். தவறான ஆலோசனையால் தவறான முடிவை எடுத்துள்ளார். இதன் விளைவுகளுக்கு அவரே பொறுப்பு.
தமிழ்நாட்டில் இந்த படத்தை எடுக்கவும் முடியாது, வெளியிடவும் முடியாது. தமிழகத்தில் அமைதியற்ற சூழல் உருவாகாமல் இருக்க முதலமைச்சர் விஜய், கமலை அழைத்து பேச வேண்டும். முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினும் இதில் தலையிட வேண்டும். ஏனென்றால் கமலுக்கு பதவி வழங்கியவரே ஸ்டாலின் தான். தற்போதுதான் அனைத்து கட்சியினரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசும் சூழல் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதையே தேவையில்லை. 'சண்டி வீரன்' என்பதற்கும் 'சண்டியர்' என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சண்டியர் என்ற தலைப்பே பிரச்சனை
இதை அரசியலாக பார்க்கவில்லை. படத்தை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிப்போம். கமல்ஹாசன் இந்த படத்தை எடுத்தால் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். சாதிய பிரச்சனைகளுக்கு உதாரணமாக கமல் திகழ்கிறார். இதில் வெளிநாட்டு தூண்டுதல் உள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது என்றார்.