இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த எல்.ஜே.கே. கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில்,
தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணைவதை ஆதவ் அர்ஜுனா தடுத்தார். த.வெ.க.விற்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, எல்.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று நடைபெற்ற இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜ.க.வுக்கு- 10, அ.தி.மு.க-வுக்கு- 2, எல்.ஜே.கே.-2 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எல்.ஜே.கே. (லட்சிய ஜனநாயக கட்சி) கட்சியின் தலைவராக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கட்சியின் வழக்கறிஞர் அணி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, கட்சிப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். எல்.ஜே.கே. சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும்.
இதனிடையே, எல்.ஜே.கே. கட்சியின் தலைவரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கும் த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த எல்.ஜே.கே. கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில்,
தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணைவதை ஆதவ் அர்ஜுனா தடுத்தார். த.வெ.க.விற்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை.
எனக்கும் என் தந்தைக்கும் இடையே பிளவை ஆதவ் அர்ஜுனா ஏற்படுத்தினார். தான் மட்டுமே அறிவாளி என்ற ரீதியில் ஆதவ் அர்ஜுனா செயல்படுவதாக கூறினார்.
முன்னதாக, கொளத்தூரில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "த.வெ.க. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பல ஆஃபர்களை த.வெ.க. தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால், அனைத்து ஆஃபர்களையும் விஜய் நிராகரித்துவிட்டார். 90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள். பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்" என்று விஜய் கூறியதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. சார்பில் நடைபெற்ற இர்தார் நோன்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், அந்த கூட்டணி, இந்தக் கூட்டணி என எந்த கூட்டணிக்கும் தவெக போகவில்லை, நாம் தனித்துதான் போட்டியிடுகிறோம். எனவே யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.
கூட்டணி தொடர்பாக கட்சியை சேர்ந்தவர்களே மாறி, மாறி கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளான ஏற்படுத்திய நிலையில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தற்போது கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.