தமிழக செய்திகள்

தேர்தல் முடிவுக்கு பிறகே தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் விஜயாக இருந்தது தெரிந்தது- ஜே.சி.டி பிரபாகர்

தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த குலமாணிக்கம் கிராமத்தில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிர பாகருக்கு, கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆரை பார்த்த மகிழ்ச்சி தமிழகம் இதுவரை பார்த்திராத ஒரு புதிய கோணத்தில் தற்போது முதலமைச்சர் விஜய்யை பார்த்துக்கொண்டுள்ளது.

எத்தனையோ முதல்வர்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் விஜய்யை பார்த்தவுடன் நான் சொல்லியது, எம்.ஜி.ஆரை பார்த்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கிறது என்றேன்.

முதல்வராக வருபவர் தன்னலமற்ற, குடும்பத்துக்கு சொத்து சேர்க்காத நபராக இருக்க வேண்டும். அப்படி தான் முதல்வர் விஜய் உள்ளார். தன்னை சூழ்ந்து இருக்கும் யாராக இருந்தாலும் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

முந்தைய ஆட்சியாளர்கள் தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வைத்துவிட்டு சென்றுள்ளனர். எனவே, நிதிநிலை சரியானதும் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் விஜய் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்றுவார்.

தேர்தலுக்கு முன்பு அனைத்து கட்சியினருக்கும் வாய்ப்பு அளிப்பேன் என முதல்வர் கூறினார். அதேபோன்று தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சிகளுக்கும் ஆட்சியில் அதிகாரம் தந்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய்

தேர்தலுக்கு முன்பாக விஜய்க்கு வந்த கஷ்டம்போல வேறு யாருக்கும் வந்ததில்லை.

எம்.ஜி.ஆர். காலத்தில் இதுபோன்று திரும்பிய பக்கம் எல்லாம் செல்போன்கள், ஊடகங்கள் இல்லை. அதனால் அவர் அனுபவித்த கஷ்டங்கள் மக்களுக்கு தெரியாது.

விஜய் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்து மக்களுக்கும் தெரியும். வீட்டுக்கு வீடு ஒரு விஜய் உள்ளார் என சொன்னார். ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் குடும்பம் குடும்பமாக விஜயாகத்தான் இருந்தனர் என தெரிந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.