தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர்கள் ஊதிய விவகாரம்: வருத்தம் தெரிவித்த மதுரை கிளை

ரூ.740 என்ற தினக்கூலியில் ரூ. 190 ரூ.240 வரை ஒப்பந்ததாரர்கள் அபகரித்துக் கொள்வதாக தூய்மைப் பணியாளர்கள் சங்கம் வழக்கு.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தூய்மைப் பணியாளர்கள் தங்களின் ஊதியத்தைப் பெறுவதற்குக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது என வருத்தம் தெரிவித்துள்ளது.

தூய்மை பணியாளர்கள் சார்பில் வழக்கு

நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டப் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் தினக்கூலியில் (ரூ. 740-ல்), ஒப்பந்ததாரர்கள் நாளொன்றுக்கு ரூ. 190 முதல் ரூ. 240 வரை சட்டவிரோதமாகப் பிடித்தம் செய்வதாகத் தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த அனிதா பிரின்சி மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது

நீதிமன்றத்தின் வேதனை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியமாக தனியாா் ஒப்பந்ததாரா்களால் ரூ.400 மட்டுமே வழங்கப்பட்டு அவா்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்றாா்.

தூய்மைப் பணியாளர்கள் தங்களின் உழைப்புக்கான ஊதியத்தைப் பெறுவதற்குக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

தூய்மை பணியாளர்கள் ஊதுயத்தை பெறுவதற்கு நீதிமன்றத்தை அணுக வேண்டியிருப்பது வேதனை அளிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.சமூகத்தில் தூய்மை பணியாளர்களின் பங்கை கருத்தில் கொள்ள வேண்டும்.

தூய்மைப் பணியாளர் பணி செய்யவில்லை என்றால் நகரங்கள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்

ஆட்சியர் நேரில் விளக்கமளிக்க உத்தரவு

இங்கு தான் கழிவறையை சுத்தம் செய்த கூலியை பெறுவதற்குக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்டப் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோா் வருகிற 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்துவைத்தனர்.

SCROLL FOR NEXT